இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.
பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.
அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் வெற்றிடத்துக்கு பதிலாகவே ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.