கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் நீர் விநியோகம் தடைப்படும்.
மகாவலி அதிகார சபையினால் பொல்கொல்ல திசைமாற்று அணைக்கட்டுக்கு நீர் இழுத்துச் செல்லப்படுவதால் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு விநியோகம் வழமைக்கு திரும்பும்.
எனவே, அப்பகுதிகளில் உள்ள நுகர்வோர் இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.