வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் அலைதிரளான பக்தர்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.
கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அந்தவகையில், நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 23ஆம் நாளான நேற்றையதினம் (31) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை அபிஷேகப் பூஜைகள் இடம்பெற்று பின்னர் காலை 7.30 மணியளவில் தேரில் உலா வந்தார் நல்லூர்க் கந்தன். வழமைபோல நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் பவனி வந்தது.
நாளை காலை (02) 06:15 அளவில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (03) மாலை 04.45 மணியளவில் பூங்காவனம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் (04) ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் வருடாந்த மகோற்சம் இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.