நல்லூர் தேர் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நம் பாரம்பரிய மரபுகளை பேணி பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன். எமது அடுத்த தலைமுறையினருக்கு அதனை கடத்துவது எம் பொருப்புக்களில் ஒன்றாகும்.
அதன்பொருட்டு யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கோவிலின் கலாசார முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நல்லூர் தேர் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்.- என்றார்.