சிவனொளிபாதமலை யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று போயா தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக நல்லதண்ணியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆண்டின் முதல் போயா நாள் என்பதால், சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் ரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மூலம் சிவனொளிபாதமலைக்கு வருவதால் தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தநிலையிலேயே சிவனொளிபாதமலையில் இன்று விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.