சமீபத்தில் ஸ்வீடனில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இலங்கை பொலிஸில் பணிபுரியும் சச்சித்ரா 40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 5.24 மீட்டர் நீளம் தாண்டி பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாஸ்டர்ஸ் போட்டி கடந்த ஒகஸ்ட் 13ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் 119 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டியில் இலங்கையில் இருந்து 14 பேர் இணைந்திருந்தனர்.