நல்லூர் தேர் திருவிழாவான நேற்றைய தினம் 72 பவுண் நகை திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலையிலிருந்து மாலை வரையான, ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இவ்வாறு நகைகள் திருட்டு போய் உள்ளதாக அந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மக்கள் அலைகடலாக திரண்ட நெரிசலில் நகைகள் அறுந்து விழுந்தும், திருடர்களால் திருடப்பட்டும் இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.