கடந்த சனிக்கிழமை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய மூன்று இலங்கையர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் சர்வதேச தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களின் மலக்குடலில் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் குழு கண்டுபிடித்தது.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம், இதன் மதிப்பு சுமார் ₹1.19 கோடி என தெரிவிக்கப்பட்டது.
இந்த மூவரும் தங்க கடத்தல் வலையமைப்பிற்கு இடைத்தரகர்களாக பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.