தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட ஆசன அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவத்தில் நேற்று (02) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தோட்டப்புறத்தின் பாரம்பரிய அரசியல் முகாம்கள் உடைக்கப்பட வேண்டுமென திலித் ஜயவீர கூறியுள்ளார்.
இதேவேளை, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட நிறுவனங்கள் வெகுவிரைவில் உத்தியோகபூர்வகமாக அறிவிக்குமென இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்பொழுது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பத்தாயிரம் வீட்டுத்திட்டங்கள் மாத்திரம் உள்ள நிலையில் பல்வேறுப்பட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி வீடமைப்புதிட்டங்களை அதிகரிப்பதற்கான முறையினை மேற்கொண்டு வருவதாகவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.