எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவையான அளவு முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யுமாறு அரச வணிகக் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து குறிப்பிட்டார்.
தற்போது முட்டையொன்று 60 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.