யாழ்மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடத்திவந்த Jaffna Volleyball League போட்டியின் இறுதிப்போட்டி நாளை (07) இடம்பெறவுள்ளது.
யாழ்.மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தலைவர் அ.ரவிவர்மன் தலைமையில் புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் இரவு 7.00 மணியளவில் மின்னொளியில் இடம்பெறவுள்ளது.
இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.