இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் – ஊரெழுவில் இடம்பெற்றுவரும் UCL துடுப்பாட்ட பிறிமீயர் லீக் தொடரின் மூன்றாம் நாள் போட்டிகளின் முடிவுகள்.
மூன்றாவது நாளின் முதலாவது போட்டியில் கல்வியங்காடு நோர்த் சுப்பிரியர்ஸ் அணியும் உரும்பிராய் ஈகிள்ஸ் அணியும் களம் கண்டன.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஈகிள்ஸ் அணி 9 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் அணைத்து இலக்குகளையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 74 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நோர்த்சுப்பிரியர்ஸ் அணி 9 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.
குறித்தபோட்டியில் லதுயன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அச்செழு ஸ்ரைக்கேர்ஸ் அணியை எதிர்த்து இருபாலை கிங்ஸ் வாரியர்ஸ் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வாரியர்ஸ் 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 101 ஓட்டங்களைக் குவித்தது. 102 என்ற இமாலய வெற்றி இலக்குடன் களிமிறங்கிய ஸ்ரைக்கேர்ஸ் அணி 6.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 43 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக விதுர்சன் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது போட்டியில் உரும்பிராய் ஈகிள்ஸ் அணியை எதிர்த்து குப்பிளான் சச்சின் அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சச்சின் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 62 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஈகிள்ஸ் அணி 3.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் எவ்வித இலக்குகளையும் இழக்காது 66 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. இப்போட்டியில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த சதிஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற நான்காவது போட்டியில், நோர்த் சுப்பிரியர்ஸ் அணியை எதிர்த்து இருபாலை கிங்ஸ் வாரியர்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த் சுப்பிரியர்ஸ் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் ஒரு இலக்கினை இழந்து 127 ஓட்டங்களை அதிரடியாக குவித்தது. 128 என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் வாரியர்ஸ் அணி 8 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இப்போட்டியில் அதிரடியாக அரைச்சதம் கடந்து, இலக்குகளையும் அபாரமாக சாய்த்த இந்துயன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்தாவது போட்டியில் புன்னாலைக்கட்டுவன் ஒளிநிலா அச்செழு ஸ்ரைக்கேர்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஒளிநிலா 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 110 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்ரைக்கேர்ஸ் 9.4 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 42 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக சுஜிந்தன் தெரிவு செய்யப்பட்டார்
ஆறாவது போட்டியில் நோர்த் சுப்பிரியர்ஸ் றோயல் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் அணி 8.4 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 44 என்ற இலகுவான ஓட்ட இலக்குடன் களமிறங்கிய நோர்த்சுப்பிரியர்ஸ் 4.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 3 இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக லதுயன் தெரிவுசெய்யப்பட்டார்.
மூன்றாவது நாளுக்கான இறுதிப்போட்டியில் கிங்ஸ் வாரியர்ஸ் அணியுடன் ஒளிநிலா மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஒளிநிலா 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 111 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ்வாரியர்ஸ் 9.1 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சுஜிந்தன் தெரிவு செய்யப்பட்டார்.