முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் நீராட சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (28.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குடும்பத்தினருடன் கடலில் குழித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.