சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கே ஜனாதிபதி சென்றுள்ளார்.
கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை சனத் நிஷங்கவின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து பெருமளவு அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.