கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் இன்று (25) முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வாக வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் இருந்து 4,000 பேரும் தமிழகத்தில் இருந்து 4,000 பேரும் என மொத்தம் 8,000 பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கச்சதீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை இன்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை வழங்க முடியும் என என ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.