இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சிலாபம் – ஆராச்சிகட்டுவ ராஜக தலுவ தேவாலயத்தில், அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் பூதவுடல், சிலாபம் ஆராச்சிகட்டுவவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நாளை காலை 10 மணியளவில் எடுத்துச்செல்லப்படவுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டோர், சனத் நிஷாந்தவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு சென்று தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
இன்று (25) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.