சமூக வலைத்தளமான Tik Tok ஊடாக கெஸ்பேவ ஜாலியாகொட மாற்றுப் பாதையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 12 இளைஞர்கள் 18 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது இளைஞர்கள் அறுவர், மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.
மாலை முதல் நள்ளிரவு வரை பெருமளவிலான முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வீதியில் அதிக சத்தம் எழுப்பி வருவதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு நிலையம் மற்றும் பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் பத்து பொலிஸ் அதிகாரிகள் குழு அங்கு சென்றது. இளைஞர்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.