குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தை அண்மித்து கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடாவெல்ல கடலில் ஐவர் இன்று பகல் குளிக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குடாவெல்ல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே இதன்போது காணாமல் போயுள்ளார். அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.