இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று 16 கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் அரியநேத்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானவர்கள்னோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு என சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மத்தியகுழுவின் தீர்மானமே கட்சியின் ஒருமித்த தீர்மானம் எனக் கருதப்பட்டு இன்று கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் இடம்பெற்றிருந்து.
அதில் தமது ஆதரவு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரே மதாஸவுக்கு என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டடிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.