இளவாலை மாதகல் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இளைஞன் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாதகல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நாகராசா பகிதரன், என இளவாலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுபசிங்க தெரிவித்தார்.
கடும் அலை காரமாக இவர்கள் சென்ற படகிலிருந்து உயிரிழந்த இளைஞன் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் நீண்ட நேர தேடுதலின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெகநாதன் சுபராஜினி விசாரணைகளை மேற்கொள்வார் என பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.