ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முஸம்மில், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கொழும்பு மேயராக பணியாற்றியுள்ளதுடன் 2017 – 2019ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி காலத்தில் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன்பின்னர், அவர் 2019இல் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதுடன் 2020இல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.