“அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க கூடிய மலையக மக்களாக இருக்க வேண்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியாவில் அமைதிவழி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதிவழி போராட்டமானது இன்று (05) தலாவாகலை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தின் நுழைவாயிலை வந்தடைந்துள்ளது.
இதன் போது, “மலையக பாடசாலைகளுக்கான 2 ஏக்கர் காணி, தோட்ட மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கு, லயன் முறமைகளை இல்லாதொழித்து புதிய வீட்டுத்திட்டங்களை அமைத்து கிராமமயபடுத்தல் வேண்டும்” போன்ற பாதாதைகளை ஏந்தியவாரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேலும், “மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் .
இதில் மலையக மக்களின் கல்வி சுகாதாரம் காணி வீடு போன்ற பிரச்சினைகளை தீர்பதற்கு இது போன்ற கோரிக்கைகளை முன்வத்துள்ளதோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று வருபவர்கள் என்னென்ன வேலைதிட்டங்களை உள்வாங்க வேண்டும் என்பது தொடர்பாக மனு ஒன்றையும் சமர்பிக்கபட உள்ளதாக“ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த போராட்டத்தின் போது 2500கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.