கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தீ மூட்டி தற்கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
35 வயது உடைய குடும்பஸ்தர் இவ்வாறு தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பொறுப்பதிகாரி சமில பளிஹன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.