இராஜாங்க அமைச்சர்கள் நால்வரின் இராஜாங்க அமைச்சு பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பிரேமலால் ஜயசேகர, இந்திக அனுருத்த, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் இராஜங்க அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பதவி நீக்கத்தை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக நிறைவேற்றியுள்ளார்.