ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம்மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.