தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யின் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இடம்பெற்ற மணல் அகழ்வு தருமபுரம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இருந்து மணல்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்று (06) குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.
அதன்போது அங்கு சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூபூக்கும் அதிகமான மணலினையும் பொலிஸார் கையகப்படுத்தினர்.
அப்பகுதியில் உள்ள மணலினை அங்கிருந்து தருமபுர பொலிஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.