சுகாதார அமைச்சுக்கு முன்பாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று (30) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, சம்பளம், கொடுப்பனவு பிரச்சினை உள்ளிட்ட சுகாதாரத்துறையில் உள்ள ஏனைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
வைத்தியர்களுக்கான கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிப்பது உள்ளடங்கலாக அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் பொருளாதார நியாயத்தை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையிலுள்ள 72 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இதில் கலந்துகொண்டனர்.
தேசிய வைத்தியசாலையிலிருந்து சுகாதார அமைச்சுக்கு முன்பாக இவர்கள் எதிர்ப்பு பேரணியாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.