இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற கனிஷ்ட ஊழியர் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவல நீதவான் சனிமா விஜேபண்டார செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய இளைய ஊழியர்களான மூவர் சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகவும், பாலியல் துன்புறுத்தல் நடந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு இது தொடர்பான முறைப்பாடு பொலிஸாரிடம் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதவான் உத்தரவிட்டார்.