26 வயதான யுவதி சடலமாக மீட்பு!
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 26 வயதான யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் திவியா எனும் 26 வயதான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யுவதி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாய் தந்தையர் வெளியில் சென்ற நிலையில் யுவதி வீட்டில் நின்றுள்ளார். தாய் தந்தையர் வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் யுவதி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.