குருணாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் மது போதையில் நுழைந்ததாகக் கூறப்படும் பொலிஸ் அலுவலர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுராகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் ஒருவரே பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸ் அலுவலர் இரவு நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது நண்பருடன் மது அருந்திய நிலையில் மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளார்.
இதன்போது, வீட்டின் உரிமையாளர் பொலிஸ் அலுவலரை திருடன் என நினைத்து அவரை பிடித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்த பொலிஸ் அலுவலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், இந்த பொலிஸ் அலுவலர் மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் குருணாகல் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.