2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா 107 இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை 64 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே அமைப்புகள் ஆண்டு தோறும் உலக பட்டினிக் குறியீட்டை வெளியிட்டு வருகின்றன.
உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, சரிவிகித உணவு, குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, சிசு உயிரிழப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டு தோறும் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று (16) வெளியானது.
121 நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 106 நாடுகளின் பட்டியலில் 101வது இடத்தில் இந்தியா இருந்தது.
கடந்த ஆண்டில் பட்டினி சுட்டெண்ணில் 65 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு 64 ஆவது இடத்துக்கு முன்னேற்றப்பட்டுள்ளது.
நேபாளம் 81வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் 84வது இடத்தையும் , பாகிஸ்தான் 99வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் 109வது இடங்களிலும் உள்ளன.