மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் (DMT) வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடையும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க அறிவித்துள்ளார்.
நிரந்தர இலக்கத் தகடுகளை வழங்குவதில் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாகவே தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
எனவே, குறித்த காலக்கெடுவிற்கு முன்னர் தமது அசல் இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிசம்பர் 15ம் திகதிக்கு பிறகு தற்காலிக வாகன இலக்கத் தகடு வைத்து வாகனங்களை ஓட்டுவது சட்ட விரோதமாக கருதப்படும். மீறுவோர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.