மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் இலங்கைக்கு நேற்று விஜயம் செய்துள்ளனர்.
இளவரசி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கலாசார நிகழ்வுகளுடன் அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்டோர் பிரமாண்டமாக வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்தே கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்பளித்தார்.