யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞன் , தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காது அதனை கிழித்துள்ளார்.
அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.