மட்டக்களப்பில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் குறித்த சம்பவம் நேற்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் குடாமுனைக்கல் வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின தாயான அப்புசிங்கம் சாந்தினி என்ற 43 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (31) அதிகாலை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான மரண விசாரணைகளை கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ்ஆனந்தன் மேற்கொண்டிருந்தார்.