நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் (Online Safety Bill)சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(01) காலை கையொப்பமிட்டுள்ளார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனை உறுதிப்படுத்தினார். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவுகளை திருத்தங்களில் உள்வாங்கியிருக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்தினர்.
உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் திருத்தங்களில் உள்வாங்கப்பட்டுள்ளதா என கையொப்பமிட முன்னர் நன்கு பரிசீலிக்குமாறு எதிர்க்கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் சபாநாயகரை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.
பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னரே அது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும்.