ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மெதமுலன டி. ஏ. ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“மிகக் குறுகிய காலத்திற்குள், பலர் தானாக முன்வந்து தலையிட்டதால், மிக வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரம் சாத்தியமானது.
எங்களால் முடியாது என்று கூறவில்லை, நாங்கள் பொய் சொல்லவும் இல்லை. மேலும், நாங்கள் பயந்து ஓடும் அரசியல் சக்தி அல்ல. தெளிவாகச் சொல்வதானால், சில அரசியல்வாதிகளை விட மக்கள் புத்திசாலிகள் என்றார்.