இந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாறை மாற்றும் தேர்தலாக அமையும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வாக்களிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையுமென நான் கருதுகிறேன். அரசாங்கமொன்றை அமைக்கவும், ஆட்சி கவிழ்ப்பதற்காகவும், அரசாங்கத்தை மாற்றவும், தலைவர்களை மாற்றவும் நீண்ட காலமாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தத் தேர்தல் நாட்டின் முக்கிய திருப்பு முனையாக இருக்குமென கருதுகிறேன்.
எனவே வெற்றியின் பின்னர் சகலரும் அமைதியைப் பேண வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கவும் விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கவும் ஒவ்வொரு நபர்களுக்கும் உரிமை வழங்குவதே ஜனநாயக அம்சமாகும். அதனை தொடர்ந்தும் நாங்கள் பாதுகாப்போம் என்றார்.