சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது
சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 லீற்றர் கோடாவும் 62 போத்தல் கசிப்பும் சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களையும் தருமபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 09.08.2022 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.