தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.