கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் வீதித்தடைகளை பல்கலைக்கழக மாணவர்கள் தாண்ட முற்பட்ட நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் வாகனங்களில் ஏற்றினர். மேலும் சம்பவத்தில் மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.