ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக வீதி மற்றும் ஜனாதிபதி வீதி ஆகியவை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் இன்று (27.09.2024) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வீதிகளை பொதுமக்கள் இன்று முதல் உபயோகிக்களாம் எனவும் தெரிவித்துள்ளார்.