அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலென்கா சம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை எளிதில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.
2வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா தனது முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்யிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.