இந்த வருடத்தின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் குறைவான மட்டத்தில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் 7 மாதங்களுக்கு 5 சதவீதத்திலும் குறைந்த மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதகமற்ற புள்ளிவிவரங்களின் விளைவுகளின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக அதிகரித்தது.
இந்நிலையில் அடுத்த வருடம் இரண்டாம் காலாண்டில் முதன்மை பணவீக்கம் தற்காலிக உயர்வொன்றைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.