நீர்கொழும்பில் கஜமுத்துக்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
இந்த கஜமுத்துக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீர்கொழும்பு – களப்பு பகுதியில் இருந்து நேற்றிரவு (27) ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.