தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2046 லீற்றர் கோடா பொலிஸாரால் அழிக்கப்பட்டுள்ளது.
தருமபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்றைய தினம் 09.09.2024 சுற்றிவளைத்தனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அதனை அடுத்து அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கோடா 2040 லீற்றரை பொலிஸார் அழித்துள்ளனர்.
அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தர்மபுரி பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.