புது வருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (04) யாழ். மாவட்ட சித்த மருத்துவமனையில், வைத்திய அத்தியட்சகர் திருமதி Dr.மனோரஞ்சிதமலர் கணேசலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணியளவில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் அனைத்து வைத்தியர்களும், பணியாளர்களும் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.