நாட்டில் பொருட்களின் விலையை குறைப்பதற்கான எந்தவித சாத்தியங்களும் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதுதான் இப்போது செய்ய வேண்டும்.
நாம் பொருட்களின் விலையை கொண்டு வரக்கூடிய மிகக் குறைந்த நிலையை அடைந்துவிட்டோம்.
ஆனால் அந்நியச் செலாவணியைப் பொறுத்தவரை, பொருட்களின் விலை நாம் கொண்டு வரக்கூடிய மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல வலுவடைகிறது. வருமானத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது. அல்லது பொருட்களின் விலை மும்மடங்கு உயர்வுக்கு ஏற்றவாறு வருமானம் ஈட்ட வேண்டும்.
அரச ஊழியர்களின் வருமானம் இந்த ஆண்டு 10000 ரூபாவால் அதிகரிக்கும். இது பொருட்களின் விலை உயர்வுக்கு கூட போதுமானதாக இல்லை. ஆனால் இந்த ஆண்டு இதைத்தான் அரசாங்கத்தால் தாங்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.