மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் வாள் ஏந்தியபடி நுழைந்த 6 பேர் அடங்கிய கும்பலே இரண்டு பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கல பொலிஸார் குறிப்பிட்டனர்.
மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேகநபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து, அங்கிருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.