யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைப் பெரிய விமானங்களும் தரையிறங்கக்கூடிய வகையில் விஸ்தரிப்பதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார் – இராமேஸ்வரம் படகு சேவையை விரைவாகத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.